சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலையக சிறுவன்

#SriLanka #Student #NuwaraEliya #Human #Body #Record
Prasu
2 years ago
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலையக சிறுவன்

நுவரெலியா - லவ்வர்ஸ் லீஃப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் அதிக உடல் உறுப்புக்களின் பெயர்களைக் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

நுவரெலியாவின் லவ்வர்ஸ் லீப் பகுதியில் வசித்துவரும் கலைநேசன் மற்றும் லலிதாம்பிகை ஆகியோரின் மகனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

images/content-image/1713555373.jpg

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமாரின் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் தமக்கு காண்பிக்கப்பட்ட சகல உடல் உறுப்புக்களின் பெயர்களையும் சரியாகக் கூறி இந்த சாதனையை படைத்துள்ளார்.

images/content-image/1713555380.jpg

 இந்த நிலையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா ஆகியோர் குறித்த சிறுவனின் சாதனையை உறுதி செய்து அவருக்கான சான்றிதழை வழங்கியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4