வாக்கு வன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காணும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
வாக்கு வன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம்  காணும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.பரணி: உங்கள் செயலில் உற்சாகம் இருக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பொருளாதார நெருக்கடி நீங்கும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உறவினரால் ஆதாயம் கூடும்.ரோகிணி: அலைச்சல் அதிகரிக்கும். தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மிருகசீரிடம் 1,2: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய பொருட்கள் சேரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். திருவாதிரை: உடல்நிலையில் கவனம் தேவைப்படும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தின் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். பூசம்: செயலில் வேகம் இருக்கும். வாக்கு வன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வீர்கள்.

சிம்மம்

மகம்: செயல்களில் இழுபறியான நிலை இருக்கும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம்.பூரம்: உங்கள் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும்.உத்திரம் 1: பெரியவர்கள் வழிகாட்டுதல் லாபம் தரும். வியாபாரம் விருத்தியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். வரவு செலவு விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.சித்திரை 1,2: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்த்த லாபத்தை இன்று அடைவீர்கள். வெளியூர் பயணம் ஆதயம் தரும்.சுவாதி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் செயலில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சி நிறைவேறி அனுகூலம் உண்டாகும். கேட்டை: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். 

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். செய்து வரும் தொழிலில் ஆதாயம் உண்டாகும். பூராடம்: சேமிப்பு அதிகரிக்கும். வருமானத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும்.உத்திராடம் 1: குடும்பத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நெருக்கடிகள் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். திருவோணம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பேச்சிலும், செயலிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். துணிவுடன் செயல்பட்டாலும் முயற்சி இழுபறியாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். சதயம்: வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பூரட்டாதி 1,2,3: நீங்கள் நினைத்ததை இன்று அடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும்.

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.உத்திரட்டாதி: உடல்நிலையில் சங்கடம் தோன்றும். ஓய்வு எடுக்க விரும்புவீர்கள். ரேவதி: இழுபறியாக இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.