இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்! விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை

#SriLanka #Fuel
Mayoorikka
2 years ago
இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்! விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் எரிபொருட்களுக்கு இன்று சனிக் கிழமை முதல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரி பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித் துள்ளது.

 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக் கப்பட்ட வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத் தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவ ணைகள் இன்று சனிக் கிழமை முதல் செலுத்தப் பட வேண்டும். 

இந்த வரியால் எரிபொருள் நிலை யங்கள் கடும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள் ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக் கப்பட்டுள்ள வற் வரி என் பது உரிமையாளருக்கு கிடைக்கக்கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியா கும். 

அதற்குரிய வற் தவ ணைகள் நாளை (இன்று) முதல் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப் படாது விட்டால் எரி பொருள் நிலையங்களால் தொடர்ந்து இயங்க முடி யாது போய்விடும். கடநத் 3 மாதங்க ளாக இந்தபிரச்னையை தீர்க்க கோரிக்கை விடுத் தோம். 

எனினும், கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும். இந்த வற் வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள்கூட 10 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வரி செலுத்த நேரிடும் - என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4