கன்னி ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்
உத்திரம் 2,3,4 பாதம் மற்றும் அஸ்தம் சித்திரை 1,2 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் கன்னி ராசி உடையவர்கள் ஆவர். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆகும்.
கன்னி ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே வாழ்வார்கள். இவர்கள் காதலித்து திருமணம் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்களுக்கு கிடைத்த வாழ்க்கை துணை இவர்கள் விருப்பப்பட்டது போல் அமையும். எந்த ஒரு காரியங்களையும் செய்வதற்கு முன்பு குடும்பத்தில் கலந்து பேசிய பிறகு செயல்படுவார்கள். உழைப்பை அதிகம் விரும்புவார்கள. பணத்தை அதிகம் செலவு செய்ய மாட்டார்கள். இவர்கள் கையில் பண புழக்கம் எப்போதுமே அதிகமாக இருக்கும். வருமானத்திற்கு தகுந்தபடி செலவு செய்வார்கள்.
வீடு, வாகனம் போன்ற வசதிகளை அமைத்து கொள்வார்கள். கன்னி ராசிக்காரர்கள் அதிகம் கோபப்படுவார்கள். இவர்கள் எதையும் மறக்கவே மாட்டார்கள். அதிகம் நியாபக சக்தி உடையவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு குணங்களை மாற்றி கொள்வார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் தனக்குதான் எல்லாம் தெரியும் என்று குணங்களை கொண்டிருப்பார்கள்.
ஆன்மிகத்தில் அதிகம் ஆர்வமுடையவராக இருப்பார்கள். பயணங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்களை வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள். இவர்களுக்கு உணவுகள் சாப்பிடுவதை அதிகம் விரும்புவார்கள். புதிதாக உடை அணிவதை அதிகம் விரும்புவார்கள். இவர்கள் பேச்சில் எல்லோரையும் கவர்ந்து விடுவார்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடித்து திருத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்களின் பேச்சில் அதிகம் நகைச்சுவைதான் கலந்திருக்கும். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் அதிகம் யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். யாரும் இவரை ஏமாற்றுவது கடினம். இவர்களின் அதிபதி புதன் என்பதால் இவர்கள் அழாகாக இருப்பார்கள். இவர்கள் நடக்கும் பொழுது அதிவேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இவர்கள் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களிடம் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்வார்கள். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு அதிகம் திட்டமிடுவார்கள்.
எந்த ஒரு செயலிலும் நிதானத்துடன் இருப்பார்கள். இவர்கள் நீண்ட ஆயுளை பெற்றிருப்பார்கள். இவர்களின் தோற்றத்தை வைத்து வயது என்னவென்று அறிந்திவிட முடியாது. இவர்களுக்கு அச்சங்களும், கூச்சங்களும் அதிகம் இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களை அடக்கி ஆள்பவர்களல்ல.
ஆனால் அவர்களால் முடிந்தவரை எல்லா விஷயங்களிலும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு பொறுப்பேற்றுக் கொள்வார்கள். மற்றவர்களை விட சிறப்பாக செயல்பட வேண்டுமென்கிற முனைப்பும் பிரச்சனைகளை அவர்களே சரி செய்துவிட வேண்டுமென்கிற எண்ணத்தையும் இயல்பாகவே கொண்டவர்கள் கன்னி ராசிக்காரர்கள்.
இருந்தாலும், கன்னி ராசிக்காரர்கள் விளையாட்டுத்தனமானவர்கள் என்பதும் பிரியமானவர்கள் என்பதும் பலருக்கு தெரியாது. கன்னி ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் நுணுக்கமாக பார்ப்பவர்கள் என்பதால், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவர்களை சுற்றியிருக்கும் நண்பர்கள், அவர்கள் நேசிக்கும், நம்பும் மனிதர்கள் என எல்லாவற்றையும் மிக கவனமாகத் தேர்ந்தெடுப்பார்கள். காதல் உறவில் அவர்கள் உயர் தரத்தை எதிர்பார்ப்பார்கள், எனவே கன்னி ராசிக்காரர்களை இணங்கச் செய்ய, நீங்கள் அவருக்கு பொருத்தமானவர் என்று நிரூபிக்க நீண்ட காலம் எடுக்கும். இவர்கள் அர்த்தமற்ற உறவுகளை வெறுக்கிறார்கள். மிகச் சரியான நபருடன் உறவில் இருக்கிறோம் என்பது உறுதியாகும் வரை அவர்கள் தனியாக இருக்கவே விரும்புகிறார்கள்.
காதல்
கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே விசுவாசமானவர்கள். எனவே நீங்கள் அவர்களுடைய காதலுக்கு தகுதியானவர்கள் என்று ஒருமுறை நினைத்துவிட்டால் இறுதி வரை உங்களுடன் இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் அதிகம் ஆசைப்படுபவர்கள் அல்ல.
எனவே ஒரு காதலே அவர்களுடைய வாழ்நாளுக்கு போதுமானது. இவர்கள் யதார்த்தமானவர்கள் என்பதால் நேர்மை தவறுவதால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்திருக்கிறார்கள். எனவே யாரையும் எளிதில் ஏமாற்ற மாட்டார்கள். ஏமாறவும் மாட்டார்கள்.
தன்னிச்சையான தன்மை இல்லாதவர்களாக இருந்தாலும், இவர்கள் பேரன்பு கொண்டவர்கள், யாரோடாவது காதல் உறவில் இணைந்தால் அவர்களுடைய இந்த பேரன்பை காட்டத் தயங்க மாட்டார்கள். இருக்குமிடத்திற்கு ஏற்றாற் போல கன்னி ராசிக்காரர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதால் இவர்களை பொதுவாக மகிழ்ச்சியை விரும்பாதவர்கள் என்று அனைவரும் கருதுவார்கள். ஆனால் உண்மையில் கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களைப் போலவே காதல், அன்பு, வேடிக்கை மற்றும் உற்சாகம் நிறைந்தவர்கள். ஆனாலும் இவர்கள் எப்போதும் சாத்தியமான எல்லா விளைவுகளையும் கருத்தில் கொண்டே செயல்படுவார்கள்.
தொழில்
எந்த தொழில் என்று தெரியாவிட்டாலும் அதனை கற்றுக்கொண்டு அதில் நிபுணராகும் வல்லமை கன்னிராசிக்கு உண்டு. புதனை அதிபதியாக கொண்ட எந்த வேலைகளையும் தனியாக செய்யாமல் குழுவாக செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள் கன்னி ராசிக்காரர்கள்.
எந்த தொழில் என்று தெரியாவிட்டாலும் அதனை கற்றுக்கொண்டு அதில் நிபுணராகும் வல்லமை கன்னிராசிக்கு உண்டு. துணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி , மருந்து விற்பனை, உலோகப்பொருட்கள் விற்பனை உள்ளிட்ட தொழில்கள் ஏற்றம் தரும்.