தொலைபேசியால் வந்த வாக்குவாதம் : நபர் ஒருவர் படுகொலை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தொலைபேசியால் வந்த வாக்குவாதம் : நபர் ஒருவர் படுகொலை!

வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 இந்தச் சம்பவம் நேற்று (19.04) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 43 வயதுடைய பிரண்டரச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.  

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4