அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் இரு மாடுகள் உயிரிழப்பு!

#SriLanka #Ampara #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் இரு மாடுகள் உயிரிழப்பு!

விபத்தொன்றில் இரு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.  

இன்று (21.04) காலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரிக்கு அருகே வீதியில் கட்டாக்காலிகளாக திரிந்த இரு மாடுகள் மோதுண்டு இறந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.  

images/content-image/1713700651.jpg

மேலும் குறித்த விபத்து இரவு இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சம்மாந்துறை பகுதி வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் நாய்கள் அதிகளவாக உலாவி திரிவதாக பொதுமக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர். 

அத்துடன் திண்மக்கழிவுகள் உரிய முறையில் அகற்றாமையினால் கட்டாக்காலிகளின் தொல்லை தினமும் இப்பகுதியில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4