05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாரம் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாளை (24.04) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மறுநாள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம் ஆகியவை கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன. 

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை COP குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4