ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை இலங்கை வருவதாக தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை இலங்கை வருவதாக தகவல்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24.04) இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். 

இதற்கான விழா நாளை நடைபெறவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் 2011 இல் ஈரானின் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் கடன் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் தேசிய மின் அமைப்பில் 120 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும். 

 இது தவிர குடிநீர் விநியோகம் மற்றும் விவசாய தேவைகளுக்கான நீர் விநியோகமும் இதன் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் நாட்டிற்கு விஜயம் செய்வதை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரச பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4