ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு 06 நிறுவனங்கள் விருப்பம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு 06 நிறுவனங்கள் விருப்பம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கான அபிலாஷைகளுக்கு இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

உலகின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையான AirAsia மற்றும் இலங்கையில் இயங்கும் Fitz Aviation ஆகியவை இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கு கோரப்பட்டுள்ள ஏலத்தில் விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விபரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு நேற்று வெளியிட்டது.

இதன்படி,

1. AirAsia Consulting Sdn. Bhd.

2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd

3. FITS Aviation (Private) Limited

4. Sherisha Technologies Private Limited

5. Treasure Republic Guardians Limited

6. Hayleys PLC ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4