ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை 3-1 (அ) தரம் 2023 (2024) இல் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, மார்ச் 2ஆம் தேதி நடைபெற்ற போட்டிப் பரீட்சை முடிவுகளின்படி, ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 29ஆம் திகதிமுதல் மே 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும்.  

தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் கல்வி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, பாடசாலை அமைப்பில் நிலவும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கல்வி அதிகாரிகள் இதுவரை முறையான வேலைத்திட்டம் எதையும் தயாரிக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4