ஸ்ரீ பாத முற்றத்தில் இருந்து கீழே குதித்த இளைஞன் பாதுகாப்பாக மீட்பு

#SriLanka #search #Missing #Mountain
Prasu
2 years ago
ஸ்ரீ பாத முற்றத்தில் இருந்து கீழே குதித்த இளைஞன் பாதுகாப்பாக மீட்பு

இரண்டு பெண்களுடன் புனித யாத்திரைக்கு சென்று ஸ்ரீ பாத முற்றத்தில் இருந்து கீழே குதித்து காணாமல் போன சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்பவரே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீபாத காப்புக்காட்டுக்கு அருகில் உள்ள நல்லதன்னிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முர்ரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளைஞனை சிகிச்சைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

 இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடுவதற்காக 3 நாட்களாக விசேட அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு பின்னர் நடவடிக்கையை கைவிட்டனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4