துலாம் ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்

#Astrology
Mayoorikka
2 years ago
துலாம்  ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்

துலாம் ராசிகாரர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் அதே போன்று அனைவரிடமும் மிகவும் இயல்பாக எளிமையாக மிங்கிளாகும் குணம் கொண்டவர்கள். கதை,கவிதை,கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். வாழ்கையை அனுபவித்து வாழ்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள் துலாம் ராசிக்காரர்கள் துலாம் ராசிகாரர்கள் காதலில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்.

பொதுவாக நாம் நேசிக்கும் விஷயங்களைக் கூட சற்று சந்தேகப் பார்வையுடனே பார்ப்பார்கள்.அதே சமயம் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார்கள்.அதிக புத்திசாலியாகவும் இருப்பார்கள்.அனைவராலும் கவர்ந்திழுக்கும் தோற்றம் உடையவர்கள்.

 துலாம் ராசியினர் எந்த சூழ்நிலையிலும் தாங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் இருக்க மாட்டார்கள்.அதில் வெற்றியும் காண்பார்கள்.துலாம் ராசியினர் அனைவரும் பெருமைப்படும்படி நடந்துகொள்வார்கள். அதற்காக தலைக்கனம் பிடித்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

காதல்,

காதல்,பாசம்,அன்பு என்று வந்தால் அவர்களை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. . துலாம் ராசிகாரர்கள் நம்பமுடியாத பல நற்குணங்களை கொண்டவர்கள்.அனைத்து இடங்களிலும் அவர்கள் சமூக அக்கறையுடன் இருப்பதை நாம் காணலாம்.அதே போன்று அனைவரிடமும் மிகவும் இயல்பாக எளிமையாக மிங்கிளாகும் குணம் கொண்டவர்கள். கதை,கவிதை,கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.வாழ்கையை அனுபவித்து வாழ்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள் துலாம் ராசிக்காரர்கள்.

 காதல் என்றால் துலாம்,துலாம் என்றால் காதல் என்றே கூட சொல்லலாம்.மனிதர்களிடம் மட்டுமின்றி இயற்கை,விலங்குகள்,பூக்கள் ஆகியவற்றின் மீது கூட அன்புடனும்,காதலுடனும் இருப்பதால் சமூகத்தில் துலாம் ராசியினர் உயர்ந்தவர்களாக திகழ்கிறார்கள்.

 திருமணம்

 மனதார அனைத்தும் ரசிப்பவர்களாக இருப்பார்கள்.யாரும் அரியாத வகையில் இருக்கும் இடங்களில் கூட நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஈர்க்கக் கூடிய விஷயங்களை கண்டிடுவார்கள். துலாம் ராசிகாரர்கள் தங்கள் கூட்டாளரை அதவாது(கணவனோ,மனைவியோ) தேர்ந்தெடுப்பதில் திறமைசாலிகள்.தனக்கேற்ற துணையை தானாக கண்டெடுத்து உயிர்க்கும் மேலாக மதிப்பார்கள்.நம் உறவினர்கள் பலர் இதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் துலாம் ராசியினர் தனக்கு எது பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து உயிராக வைத்துக் கொள்வார்கள்.

துலாம் ராசியினரை நீங்கள் காதலித்தால் அவர்கள் மனத்திற்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டும்.அன்பை மட்டுமே அவர்களிடம் காண்பிக்க வேண்டும் அவ்வாறு செய்தால் உங்களை வாழ்நாள் முழுவதும் உயிருக்கும் மேலாக மதிப்பார்கள். துலாம் ராசியினர் ரொமன்ஸில் வேற லெவலாக இருப்பார்கள்.அதாவது மற்ற பாலினத்தவரை வசியம் செய்து தன் வசம் ஈர்க்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

images/content-image/2024/04/1714011222.jpg

குறிப்பாக துலாம் ராசிகாரர்களை செக்ஸ் விஷயத்தில் அடிச்சிக்க யாரும் இல்லை என்றே கூட கூறலாம். துலாம் ராசியினர் தங்களின் துணையை அனுஅனுவாக ரசித்து காதலிப்பார்கள்.அவர்களின் ரசனை உணர்வும் அதிகமே…

 தொழில்

 அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தவறான பாதையில் சென்றால் அவர்களை வெறுக்க மாட்டார்கள்.அவர்களுக்கு நல்லது கெட்டது எடுத்துக்கூறி நல்வழியில் நடத்தச் செய்வார்கள். துலாம் ராசிக்காரர்கள் சேர்ந்த சிறந்த வியாபாரியாக இருப்பர். இரும்பு, தங்கம் போன்ற வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். துணி தொடர்பான வியாபாரம் சிறப்பாக இருக்கும். 

துலாம் ராசிக்காரர்கள் எந்த பணியில் இருந்தாலும், அங்கு சிறப்பான பதவியில் இருப்பவர்கள். அப்படியே இவர்களது சிறப்பு தன்மை வெளிப்படும். வழக்கறிஞர், இசைக்கலைஞர், நடிப்புத் துறையில் பெயர் பெற வாய்ப்பு உண்டு. 5 வயதிலிருந்து 20 வயது வரை இவர்களது வாழ்க்கை இன்பமாக இருக்கும். 21-30 வயது வரை பல துன்பங்கள் ஏற்படும்.

 அதன் பின்னர் மீண்டும் சிறப்பான வாழ்க்கையாக தான் இருக்கும். அனைத்து ராசிகளின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்? எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள் யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளது .

 துலாம் ராசிக்காரர்களுக்கு நீல நிறம் அதிர்ஷ்டமாகும். நீல நிறம் உடைய ஆடைகளை அணிந்து வந்தால் எதிலும் சுபம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4