IPL - 205 ஓட்டங்கள் குவித்த பெங்களூரு அணி

#IPL #T20 #Cricket #hyderabad #Bengaluru #2024
Prasu
11 months ago
IPL - 205 ஓட்டங்கள் குவித்த பெங்களூரு அணி

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவில், இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்,. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில் டு பிளசிஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வில் ஜேக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரஜத் படிதார் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். விராட் கோலி, படிதார் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். 

இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசியில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடினார்.

 இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 207 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!