பெரியவர்கள் ஆலோசனையுடன் வெற்றியடையும் கடக ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
பெரியவர்கள் ஆலோசனையுடன் வெற்றியடையும் கடக ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். பரணி: வீண் பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருப்பதால் மற்றவர்களை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற சங்கடத்தையும் சிலர் அடைவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். மிருகசீரிடம் 1,2: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.திருவாதிரை: எதிரிகளால் தோன்றிய சங்கடங்களுக்கு தீர்வு காண்பீர்கள். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: குழந்தைகள் குறித்த கவலை வந்து செல்லும். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்ய திட்டமிடுவீர்கள். பூசம்: பெரியவர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். வெளியூர் பயணத்தில் ஆதாயம் காண்பீர்கள்.

சிம்மம்

மகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்கள். பூரம்: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1: வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தடைப்பட்டிருந்த முயற்சியில் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். நிதிநிலை உயரும்.அஸ்தம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். உறவினர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். சித்திரை 1,2: வரவேண்டிய பணம் வந்துசேரும். சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். 

துலாம்

சித்திரை 3,4: உங்கள் முயற்சிகளுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்கள். வருமானம் அதிகரிக்கும். சுவாதி: நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் முயற்சிகள் லாபமாகும். விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் செயலில் லாபம் காண்பீர்கள். அனுஷம்: மனதில் குழப்பம் தோன்றும். தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். கேட்டை: தேவையற்ற நெருக்கடிகளுக்கு இன்று ஆளாவீர்கள். பொன் பொருள்களைக் கையாளுவதில் கவனம் தேவை. 

தனுசு

மூலம்: வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.பூராடம்: குடும்பத்தினர் உங்கள் எண்ணத்திற்கு எதிராக செயல்படுவார்கள். புதிய பிரச்னைகள் உண்டாகலாம். உத்திராடம் 1: திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் செயல் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.திருவோணம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அவிட்டம் 1,2: தொழிலில் இருந்த தடைகள் விலகும். உங்கள் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். 

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்றுவரை நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.சதயம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி ஒன்று ஆதாயத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையை சரி செய்வீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். உத்திரட்டாதி: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். நண்பர்களால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.ரேவதி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பாராத வரவு வந்து சேரும்.