வவுனியா புதிய பேருந்து நிலைய மலசலகூடத்தால் மக்கள் அசெளகரியம்!

#SriLanka #Vavuniya
Mayoorikka
2 years ago
வவுனியா புதிய பேருந்து நிலைய மலசலகூடத்தால் மக்கள் அசெளகரியம்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக இருக்கும் இரண்டு தொகுதி மலசலகூடங்களும் சீரான முறையில் இல்லை என்பதுடன் இதில் ஒரு தொகுதி மலசலகூடம் பாவனையில் இல்லாமல் பூட்டி வைத்துள்ளனர்.

 தேசிய போக்குவரத்து அதிகாரசபையினர் வவுனியா புதிய பேருந்து நிலையமானது ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களை கடந்த பின்னரும் இன்றுவரை பேருந்து நிலையத்தை நகரசபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நிர்வாக கட்டமைப்பை தேசிய போக்குவரத்து அதிகாரசபையினரின் (NTC) கட்டுப்பாட்டிற்குள்ளேயே இன்றுவரை உள்ளது என்பதுடன் இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை எந்த ஒரு குரலையும் கொடுக்கவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

images/content-image/2024/04/1714194322.jpg

 இதேவேளை குறித்த மலசலகூடங்கள் சுகாதார சீர்கேடாக காணப்படுவதால் நாளுக்கு பலநூற்றுக்கணக்கானோர் ஒரே மலசலகூடத்தை உபயோகிப்பதனால் தொற்றுநோய்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை காணப்படுகிறது மேலும் மலசலகூடங்களை குத்தகைக்கு வழங்காமல் அதற்கு ஒரு கட்டணத்தையும் தேசிய போக்குவரத்து அதிகாரசபையினர் அறவிடுகின்றனர்.

images/content-image/2024/04/1714194343.jpg

 எனினும் மலசலகூடம் பாவனைக்கு உதவாத நிலையிலேயே காணப்படுகிறது இதேவேளை பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மோட்டார்சைக்கிள்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்திவிட்டு பேருந்தில் பயணிப்பதால் அப்பகுதியில் பல திருட்டு சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மக்கள் பிரதிநிதிகளே இது உங்களின் கவனத்திற்கு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4