தமிழ் தேசத்து தொழிலாளர் எழுச்சிக்காய் அழைக்கின்றோம்!

#SriLanka #may day
Mayoorikka
2 years ago
தமிழ் தேசத்து தொழிலாளர் எழுச்சிக்காய் அழைக்கின்றோம்!

இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தமிழர் தேசத்தின் இறைமை சுய நிர்ணய உரிமை இவற்றை வலியுறுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

 நாளைய தினம் காலை வவுனியா குருமன் காடு கலைமகள் விளையாட்டு அரங்கில் மாலை 3 மணி அளவில் இடம்பெறவுள்ளது.

 இந்த கூட்டத்தில் இனப்படுகொலைக்கான சர்வதேச குற்றவியல் விசாரணை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, பயங்கரவாத தடை சட்ட நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை, இந்திய மீனவர்களின் அத்துமீறல், கட்டுப்படுத்தப்பட்டு தமிழர் தேசத்து தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அழிந்து கிடக்கும் தமிழர் தேசத்து விவசாய பொருளாதாரமும் பிற தொழில்களின் பொருளாதாரமும் மீளக் கட்டி எழுப்பப்பட வேண்டும், 15 வருடங்களாக தொடரும் முன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் போன்ற அம்சங்களை அடிப்படையாக வைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின கூட்டம் இடம்பெறவுள்ளது.

images/content-image/2024/1714470783.jpg

 இந்தக் கூட்டத்திற்கு அனைவரையும் அழைத்து நிற்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின கூட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4