IPL - 1 ஓட்டத்தில் வெற்றியை ருசித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
இவர்களில் அபிஷேக் சர்மா இந்த முறை ஏமாற்றம் அளித்தார். அவர் 12 ரன்களில் ஆவேஷ் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை அபாரமாக வீசிய புவனேஸ்வர் குமார், அதிரடி ஆட்டாக்காரர்களான ஜாஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சனை அவுட்டாக்கினார்.
இதையடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியின் ஈடுபட்டனர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்ரேட் உயராமல் பார்த்துக்கொண்டனர். அத்துடன், இருவரும் அரைசதம் அடித்து அடித்தனர்.
இந்த ஜோடி 135 ரன்கள் திரட்டிய நிலையில் பிரிந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணியால் 11 ரன்களே எடுக்க முடிந்தது.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.