அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அதில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை?
கோடைக்கால வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே, உச்சிவெயில் நேரம் என்ன? அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அதில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற முழு விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்.
இது ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பஞ்சாங்கப்படி ஞாயிறு (சூரியன்) பரணி விண்மீன் மூன்றாம் பாதத்தில் தொடங்கி கிருத்திகை மீன் முழுவதும் வலம்வரும் காலகட்டமாகும்.
சூரியன் மேட இராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும். திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை செய்யலாம்.
மேலும் இந்த காலகட்டத்தில் அக்னி பகவானை வழிபாடு செய்து நீர் தானம், அன்னதானம், கால் அணிகளை தானம் கொடுப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் அக்னி தேவனின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.
செய்யக்கூடாதவை:
புது வீடு புகுதல், பால் காய்ச்சுதல், செடி கொடிகளை வெட்டுதல், தலை முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கிணறு வெட்டுதல் , மரம் வெட்டுதல் விதை விதைத்தல், வீடு பராமரிப்பு பணிகளில் தொடங்குதல், நெடுந்தூரப் பயணம் , பூமி பூஜை போன்றவற்றை செய்யக்கூடாது.
இந்த நாட்களில் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மயக்கம் ஏற்படும். மேலும் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க கையில் எப்போதும், தண்ணீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை வைத்து கொள்ள வேண்டும்.
தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதனுடன் நீங்கள் குடிக்கிற மோர், ஜூஸ், இளநீர் இவற்றையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். நீர் ஆகாரங்கள் எடுப்பதோடு, தனியாகத் தண்ணீரையும் நிறையக் குடிக்க வேண்டும்.
முடிந்தவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாம். முடியாத நாள்களில் பழைய சாதத்தின் தண்ணீரில் கல் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து குடிக்கலாம். உடலுக்குத் தேவையான தாது உப்புகள் கிடைப்பதுடன், உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.