தமிழகத்தில் 112 டிகிரியில் வெப்ப அலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
#India
#Tamil Nadu
Mayoorikka
11 months ago

தமிழ்நாட்டில் 18 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வாட்டி வதைத்தது.
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. பல ஆண்டுகளாக இல்லாத வகையில் கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் வெப்பநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் பகல் வேளைகளில் வீடுகளிலேயே தஞ்சமடைகின்றனர்.
மரங்களை வளர்க்காததாலும், இயற்கை வளங்களை பறிகொடுத்ததாலும் இதுபோன்று கரூரில் அதிக வெப்பநிலை பதிவாகியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



