மிதுன ராசியினருக்கு மனதில் தேவையற்ற பிரச்சனைகள் அலைமோதும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 months ago
மிதுன ராசியினருக்கு மனதில் தேவையற்ற பிரச்சனைகள் அலைமோதும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சிகள் லாபமாகும் நாள். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.பரணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவீர்.கார்த்திகை 1: உங்கள் செயல் வெற்றியாகும் நாள். பொருளாதார நிலை சீராகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் அதிகரிக்கும்.ரோகிணி: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றும். நிதானம் காப்பதால் நன்மை உண்டாகும். மிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும். வருவாய் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர். விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தேவையற்ற பிரச்னை அலைமோதும்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி இழுபறியாகும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தடுமாறுவீர். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.பூசம்: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நீண்டநாள் விருப்பம் பூர்த்தியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.ஆயில்யம்: எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

சிம்மம்

மகம்: உங்கள் செயல் லாபமாகும். வருமானம் அதிகரிக்கும். பண விவகாரங்களில் விழிப்புணர்வு அவசியம்.பூரம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும்.உத்திரம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: உடல் நிலையில் உண்டான பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். உங்கள் செயல் லாபமாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்பட்டுவீர்கள்.சித்திரை 1,2: ஆரோக்கியம் சீராகும். எதிரிகளின் தொல்லை விலகும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். நன்மை நடக்கும் நாள்.சுவாதி: செலவு கட்டுக்குள் வரும். சேமிப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு லாபமடையும் நாள்.விசாகம் 1,2,3: பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை தோன்றும். உறவுகள் கசக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் சில நெருக்கடி உண்டாகும். அனுஷம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நன்மை அதிகரிக்கும்.கேட்டை: தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடிவரும். சக பணியாளர்களுடன் விவாதம் வேண்டாம்.

தனுசு

மூலம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும் நாள்.பூராடம்: உங்கள் செயலில் ஒரு சில தடை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். வியாபாரத்திலுள்ள தடை நீங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு வரும். நினைத்தது நிறைவேறும்.திருவோணம்: வியாபாரத்தில் நெருக்கடி உருவாகும். வருவாயில் தடை ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.அவிட்டம் 1,2: பணத்தேவை நிறைவேறும், முயற்சியில் இருந்த தடை விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சிக்கேற்ற பலனை அடைவீர். குடும்ப நெருக்கடி விலகும். உங்கள் செயல் லாபமாகும் நாள்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கையில் பணம் புரளும். தேவைகள் பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: மனதில் ஒருவித குழப்பம் இருக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். நிதானம் தேவையான நாள்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும், முயற்சி இழுபறியாகும். கவனமாக செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள்.உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.ரேவதி: செயல்களில் நெருக்கடி உண்டாகும். பணவரவில் தடையுண்டாகும்.