அம்பாறையில் இரு பேருந்துகள் மோதி கோர விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அம்பாறையில் இரு பேருந்துகள் மோதி கோர விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

அம்பாறை ECC சந்திக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்றுடன், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (03.05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் உள்பட 33 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அம்பாறையில் இருந்து நெய்தா நோக்கி பயணித்த பாடசாலை பஸ் ஒன்றும் அக்கரப்பற்றில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த லங்காம பஸ்ஸூம் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தின் போது அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை அம்பாறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

இந்த விபத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தற்போது சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும்  குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4