இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்துகின்றது

#SriLanka #Election
Mayoorikka
1 week ago
இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்துகின்றது

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் அரசசொத்துக்களை பயன்படுத்துகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

 தேர்தல்களிற்கு இன்னமும் சில மாதங்களே இருக்கையில் அரசாங்கம் அரசசொத்துக்களை தவறாக பயன்படுத்துகின்றது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி தேர்தலை நோக்கமாக கொண்டு அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் வறியமக்களிற்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தினால் வரிசெலுத்துவோரின் மில்லியன் கணக்கான பணம் வீணடிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

 அபிவிருத்தி நடவடிக்கைகளிற்காக ஒவ்வொரு உள்ளுராட்சி பகுதிக்கும் அரசாங்கம் 10 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது மாகாணஆளுநரின் விருப்பத்தின்படி இந்த நிதி பயன்படுத்தப்படும் ஆளுநர் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி எனவும் தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியராச்சி இது ஜனாதிபதி தேர்தலை மையமாக கொண்ட நடவடிக்கை என்பது வெளிப்படையான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

 ஜூலை 31ம் திகதிக்குள் இந்த திட்டங்களை பூர்த்திசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்,ஆகஸ்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் இதன் காரணமாகவே அரசாங்கம் ஜூலை 31ம் திகதிக்குள் இந்த திட்டங்களை பூர்த்தி செய்ய விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.