கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட்டாலும் வாகன இறக்குமதி தாமதமாகலாம்!

#SriLanka #Import
Mayoorikka
2 years ago
கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட்டாலும் வாகன இறக்குமதி தாமதமாகலாம்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட்டாலும், ஜப்பானிலிருந்து கார்களை இறக்குமதி செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜப்பானின் இலங்கை வாகன சாரதிகள் சங்கத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொவிட் காலத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட திறக்கப்பட்ட போது கடன் கடிதங்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

 இதன் காரணமாகவே ஜப்பானிலிருந்து கார்களை இறக்குமதி செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என ஜப்பானின் இலங்கை வாகன சாரதிகள் சங்கத்தின் ஆலோசகர் ஜனக ராமநாயக்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4