இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (05.05) மேலும் அதிகரித்து  அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் "அதிக கவனம்" தேவைப்படும் மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.

 மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் "கவனம்" கோரும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்றும்,  இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4