வெலிகம கடலில் நீராடச் சென்ற இளைஞருக்கு நேர்ந்தக் கதி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெலிகம கடலில் நீராடச் சென்ற இளைஞருக்கு நேர்ந்தக் கதி!

வெலிகம கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வெலிகம, கந்துவ பிரதேசத்தில் நேற்று (04.05) பிற்பகல் கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 இரண்டு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. இம்மாதம் 6ஆம் திகதி வரை கடலில் நீராடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். 

வெலிகம, கொலதந்த பகுதியைச் சேர்ந்த அப்துல் பாஷித் என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4