பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்

#Cinema #Death #Actor #Bollywood
Prasu
10 months ago
பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 79 ஆகும். 

உலகளவில் மிகவும் பிரபலமான திரைப்படம் டைட்டானிக்-இல் கேப்டன் எட்வார்ட் ஜான் ஸ்மித் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பெர்னார்ட் ஹில். 

டைட்டானிக் தவிர தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மற்றும் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். பெர்னார்ட் ஹில் உயிரிழப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் விரைவில் தகவல் தெரிவிப்பர் என்று தெரிகிறது. 

இவரது மறைவு தொடர்பான தகவலை டைட்டானிக் படத்தில் இவருடன் நடித்த பார்பரா டிக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பதிவில், "பெர்னார்ட் ஹில் உயிரிழந்தார் என்ற தகவலை மிகவும் துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் இருவரும் ஜான் பால் ஜார்ஜ் ரிங்கோ மற்றும் பெர்ட், வில்லி ரசல்-இன் அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல் பென்னி," என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!