போதைப் பொருளுக்கு அடிமையான தந்தை: மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்

#SriLanka #Colombo #Police #Crime
Mayoorikka
2 years ago
போதைப் பொருளுக்கு அடிமையான தந்தை: மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்

குழந்தைகளுக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத தந்தைகளுக்கு மத்தியில் அவர்களின் பெயரைக் கூட கேவலப்படுத்தும் சில தந்தைகளும் இருக்கிறார்கள்.

 போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய அத்தகைய தந்தை பற்றிய தகவல் ஒன்றே வௌியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

 தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை தூக்கி தரையில் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்ததுடன், தரையில் விழுந்து படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4