குறிப்பிட்ட சில சுகாதார சேவையாளர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை : அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
குறிப்பிட்ட சில சுகாதார சேவையாளர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை : அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். 

 பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட  அவையில் இன்று (07.05) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரமேஷ் பத்திரன, இது தொடர்பாக நீதித்துறை விவகாரம் உள்ளது. ஒரு கட்டத்தில், 61 வயது வரை நீட்டிக்க சம்மதித்தோம். அது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்தோம். 61 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, புதிதாக சுமார் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

இதன்படி, விரைவில் தாதியர் சேவைக்கு நியமிக்கப்பட முடியும் எனவும், தாதியர் சேவையில் தற்போது 45,000 பேர் உள்ளதாகவும், சுமார் 1,000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4