பிரபல அரசியல்வாதியின் மகன் அதிரடியாக கைது!
#Arrest
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியின் மகனை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாகன விபத்தை ஏற்படுத்தி வீதியில் பயணித்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பாடசாலை மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அவரின் மகன் தற்போது பிணையில் விடுதலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே