ரம்புக்கனவில் குளியல் தொட்டியில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ரம்புக்கன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடிகமுவ லபுகொல்லாவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
ரம்புக்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பன்வில பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே