ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த முறைப்பாடு இன்று (08.05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இது தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க அனுமதிக்குமாறு பிரதிவாதி கோரினார். 

அதன்படி, ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் 15ம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.  

நீதியான விசாரணையின்றி தம்மை பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் எடுத்த தீர்மானத்தை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி அமைச்சர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4