தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கைது!

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.  

சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த மனித இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாடி ஊசி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்கினார்.  

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4