02 கோடிக்கு அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
02 கோடிக்கு அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து இந்த நாட்டிற்கு வந்துள்ளார் என்பதும் அவரது சூட்கேஸில் கவனமாக பொதி செய்யப்பட்ட 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர். 

சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4