உங்கள் பெயர் “T” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

T என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நபர்கள் தங்கள் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவாக கிடைக்கும் முடிவுகளில் எப்போதும் முழு திருப்தி அடைகிறார்கள்.
இவர்கள் அறிவார்ந்த மற்றும் புத்திசாலித்தனமான வழிகளில் வெற்றி பெறுவதை விரும்புகிறார்கள்.
மேலும் இவர்கள் தங்கள் திறனின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் இவர்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் தங்கள் முடிவுகளில் தீர்க்கமானவர்கள்.
தங்கள் நோக்கங்களில் எப்போதுமே தெளிவாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் கொள்கைகள் மற்றும் லட்சியங்களை நோக்கி பயணிப்பவர்களாக இருக்கிறார்கள். எந்த சூழலிலும் இவர்களது சித்தாந்தத்தை பிறரால் அசைக்கவோ அல்லது சமரசம் செய்ய வைக்கவோ முடியாது.
இவர்களது வசீகரம் காரணமாக கூட்டத்தில் சூரியனை போல பிரகாசிப்பார்கள். பலரின் எண்ணத்தை இவர்கள் பிரதிபலிப்பவர்களாக இருப்பதால் வெற்றிகரமான தலைவராக திகழ கூடிய வாய்ப்புகள் அதிகம்.
மேலும் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆன்மீகம் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும்.
ஒரு வகையான தாராளம் மற்றும் கனிவு கொண்ட இவர்களின் நடத்தை மற்றும் ஆளுமை காரணமாக பலருக்கு மத்தியில் இவர்கள் தனித்து நிற்பார்கள்.
எப்போதும் புன்னகையுடன் இருக்கும் இவர்கள் தங்களிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு மறுக்காமல் உதவ வேண்டும் என நினைப்பார்கள். இது பிறர் மத்தியில் இவர்களுக்கான மதிப்பை கூட்டுகிறது.
T-ல் பெயர் துவங்கும் பெண்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்கள். இவர்கள் வாழ்க்கையில் சிறந்த ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், ஓவியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் செஃப்-ஆக ஜொலிப்பார்கள்.
தவிர கவுன்சிலிங், ஃபினான்ஸ் எஜூகேஷன் , ட்ரெயினிங், அரசியல் மற்றும் அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடும் T-ஐ முதலெழுத்தாக கொண்ட பெயரை உடைய நபர்கள் வெகுசிறப்பாக செயல்படுவார்கள்.
ஆங்கில எழுத்தான T-ஆனது விளையாட்டு துறையை விட அனிமேஷன் போன்ற படைப்பாற்றல் துறையில் உள்ளவர்களை அதிகம் சாதிக்க வைத்துள்ளது. தீர்த்தங்கரர் போன்ற சிறந்த ஆன்மீகத் தலைவர்களையும் T உருவாக்கியுள்ளது.



