இலங்கையில் உடல் பருமனால் பறிபோன 4000 ஆயிரம் உயிர்கள்!

#SriLanka
Mayoorikka
2 years ago
இலங்கையில்  உடல் பருமனால் பறிபோன 4000 ஆயிரம் உயிர்கள்!

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

 ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் விரிவுரையின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 89 சதவீதமான மரணங்கள் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றது.

 இதில் பெரும்பாலான இலங்கையர்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துள்ளனர். வருடாந்தம் சுமார் 60,000 இலங்கையர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த வருடம் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இதேவேளை தொற்றாத நோய்களுக்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4