போலி இத்தாலி மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது

#SriLanka #Arrest #Airport #Passport #Katunayaka
Prasu
2 years ago
போலி இத்தாலி மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது

இலங்கை வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி இத்தாலிய மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப் பயணச்சீட்டு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தேக நபர் துபாய் மாநிலத்திற்குச் சென்று ஜவுளி மற்றும் காலணிகளை கொண்டு வந்து இந்த நாட்டில் விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 09 இத்தாலிய கடவுச்சீட்டுகள், 09 தொடர்புடைய வீசாக்கள், ஒரு அசல் அட்டை மற்றும் போலியான ஜேர்மன் கடவுச்சீட்டை உருவாக்குவதற்கு தேவையான ஒரு வீசா ஆகியவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4