மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று (11.05) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் அபாயம் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4