இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, இலங்கைக்கு அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளதால், நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

நாடடின் பல மாகாணங்களில், சுமார் 1.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.  

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். 

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4