மனித பாவனைக்கு தகுதியற்ற அரிசியை சூட்சுமமான முறையில் விநியோகிக்க திட்டம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மனித பாவனைக்கு தகுதியற்ற அரிசியை சூட்சுமமான முறையில் விநியோகிக்க திட்டம்!

மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கையிருப்பு அரிசியை விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (12.05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போ குறித்த அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. 

கிரிஇப்பேவ பிரதேசத்தில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு 08 லொறிகள் மூலம் 170,000 கிலோகிராம் அரிசி எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொதி செய்யப்பட்ட போது இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிசியின் பொதிகளில் எழுதப்பட்ட திகதி காலாவதியாகியிருந்த நிலையில், மீளவும் அதனை இயந்திரத்தனமாக சுத்தம் செய்யப்பட்டு, காலாவதி திகதி மாற்றப்பட்டு விநியோகிக்க தயாராக வைக்கப்பட்டுள்ளது. 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்த அரிசியை அரசாங்கம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட அரிசி கையிருப்பு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அரிசி ஆலையின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4