புலம் பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைத்த பாரிய இலாபம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புலம் பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைத்த பாரிய இலாபம்!

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்ட வங்கி முறையின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  

ஏப்ரல் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 543 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 11.4 வீத அதிகரிப்பாகும். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த நாட்டிற்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்ட தொகை 19.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4