உங்களுக்கு நாக தோஷமா? எவ்வாறு கண்டறிதல்! பரிகாரங்களும் வழிபாடும்

#Astrology
Mayoorikka
5 months ago
உங்களுக்கு நாக தோஷமா? எவ்வாறு கண்டறிதல்!   பரிகாரங்களும் வழிபாடும்

நாக தோஷம் திருமணம், குழந்தை பேறுக்கு தடையாக இருக்கக் கூடியது என்பார்கள். ஜோதிடத்தின் படி நாக தோஷம் என்பது திருமண ஸ்தானமான 7ம் வீட்டில் ராகு இருப்பதால் நாக தோஷம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 1,2,5,7,11 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது அமைந்திருப்பதால் திருமணம் அல்லது குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம் சிக்கல் ஏற்படும் சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். 

 ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு. ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5--ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். 

 புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸ்தானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது. இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். 

images/content-image/2024/05/1715566615.jpg

மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும். இந்த பரிகாரத்தை நாக சதுர்த்தி எனும் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே செய்வது அவசியம். ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வருகின்ற வளர்பிறை கருட பஞ்சமிக்கு முந்தைய தினமான சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். இந்த சிறப்பான நாளில் விரதமிருந்து நாக பிரதிகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வதை நாகசதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி திதி என்கின்றனர்.

 இந்த நாக சதுர்த்தி அன்று அரசமரத்திற்கு அடியில், ஒரு நாக சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அந்த நாக சிலை எப்படி இருக்க வேண்டுமென்றால், அதன் அடியில் நாக எந்திர பீடத்தில் மீது இருப்பது போலவும். அந்த நாகங்கள் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருப்பது போல உள்ள நாகத்தின் கருங்கல் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நாக தோஷம் நம்மிடமிருந்து நிரந்தரமாக விட்டு செல்லும் என்கிறார் போகர். அதாவது நாக சிலை இரண்டரை அடிக்கும் குறைவான உயரம் (பீடத்தை சேர்த்து), பாம்புகள் இரண்டு அல்லது ஐந்து சுற்றுக்கள் பிண்ணிக் கொண்டிருப்பது போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தில் முழு விரதம் இருக்கலாம்.

images/content-image/2024/05/1715566677.jpg

 அல்லது பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு பய பக்தியுடன் விரதமிருந்து செய்ய வேண்டும். இப்படி நாக தோஷம் உள்ளவர்கள் போகரின் குறிப்புகளின் படி நாக சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு இருக்கும் நாக தோஷம் நிரந்தரமாக விட்டு நல்வாழ்வு வாழலாம். கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும்

 நாக வழிபாடு பலன்கள் 

 நாக தோஷம் தவிர்த்த மற்ற பிரச்னைகளை சந்திப்பவர்களும் நாக வழிபாடு நல்ல பலனை தரும். அதாவது ராகு கேது தோஷங்களால் திருமண தடை, குழந்தை பாக்கியம் பெறுவதலில் தடை உள்ளவர்கள் இந்த நாகங்களை வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். நாக சிலைக்கு அருகில் ஏதேனும் நீர் நிலைகள் இருந்தால் அந்த நீரை எடுத்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.

images/content-image/2024/05/1715566742.jpg

 ஒருவன் நாகங்கள் தீண்டி இறந்தான். அவனின் உயிரை மீட்டு தர தன் சகோதரி நாகராஜனை வேண்டிக் கொண்டு வழிபாடு செய்ய, அவளின் சகோதரனின் உயிரை மீட்டுக் கொடுத்ததாக புராண கதையும் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!