போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்  இன்று (13.05) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.  

அவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராகவும் தற்போது பணியில் இருப்பவர் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4