இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (14.05) பிற்பகல் மழையுடன் கூடிய வானிலை பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தெற்கு, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே