காதல் உறவால் நேர்ந்த விபரீதம் : பாடசாலை மாணவியை கடத்திய நால்வர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காதல் உறவால் நேர்ந்த விபரீதம் : பாடசாலை மாணவியை கடத்திய நால்வர் கைது!

பொதுப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தெரியபடுத்தியதை அடுத்து குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்படி  ஆலதெனிய பொலிஸார் உடனடியாக செயற்பட்டு வேனையும் குழுவினரையும் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்துள்ளனர். 

சந்தேகநபர்கள் நால்வரில் ஒருவர் இந்த யுவதியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரான சந்தேக நபர், தனது நண்பர்களுடன் வாடகைக்கு வான் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இந்த பாடசாலை மாணவியை கடத்த வந்துள்ளார். 

பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ சிப்பாயான இப் பாடசாலை மாணவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு சந்தேகத்திற்கிடமான இளைஞன் பல தடவைகள் சென்று வந்ததை அடுத்து இந்த காதல் உறவு ஏற்பட்டுள்ளது. 

சந்தேக நபர் திருமணமானவர் என தெரியவந்ததையடுத்து மாணவி அவரை கைவிட்டுச் சென்றதுடன் சந்தேக நபரின் அழுத்தத்தினால் மாணவியின் பெற்றோர்கள் குளகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்தற்காலிகமாக தங்கியுள்ளனர். 

அங்கிருந்து பொதுதரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாணவி கடத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4