மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கால அவகாசம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கால அவகாசம்!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (17.05) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

மே மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், மின்சார சபை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.

 எவ்வாறாயினும், கடந்த 10ஆம் திகதி இலங்கை மின்சார சபை உரிய முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

அதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு மற்றுமொரு நினைவூட்டலை விடுத்துள்ளது. 

முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், மின் கட்டண குறைப்பு சதவீதத்தை ஜூலை மாதம் அறிவிக்க முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4