மின்சாரக் கட்டணக் குறைப்பு சதவீதம் ஜூலை மாதம் அறிவிக்கப்படும்!

#SriLanka
Mayoorikka
2 years ago
மின்சாரக் கட்டணக் குறைப்பு சதவீதம் ஜூலை மாதம் அறிவிக்கப்படும்!

மின்சாரக் கட்டணக் குறைப்பு சதவீதம் எதிர்வரும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 அதற்கான முன்மொழிவுகள் கிடைத்தவுடன் மின்கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கை தொடங்கப்படும். இதேவேளை, மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை சமர்ப்பிக்க வௌ்ளிக்கிழமை (17) வரை கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இந்த முன்மொழிவுகள் ஆணைக்குழுவிடம் மே 1ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில், மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எதிர்வரும் 10ஆம் திகதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

 எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகளை கடந்த 10ஆம் திகதி இலங்கை மின்சார சபை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பில் மின்சார சபைக்கு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4