கும்ப ராசியினருக்கு யோகமான நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
கும்ப ராசியினருக்கு யோகமான நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும்.பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். கார்த்திகை 1: தடைகள் விலகும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி அடையும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேறும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். திருவாதிரை: நீண்டநாள் பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். நிதானமாக செயல்படுவதால் சங்கடங்கள் விலகும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.பூசம்: எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையுண்டாகும்.ஆயில்யம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

சிம்மம்

மகம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.பூரம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடிவரும். உத்திரம் 1: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் நாள். உத்தியோகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.அஸ்தம்: உங்கள் வேலைகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சித்திரை 1,2: முடியாது என்று மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பார்கள்.சுவாதி: எளிதாக முடியவேண்டிய வேலையும் கடைசி நேரத்தில் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வருமானம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். கேட்டை: பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். பூராடம்: திட்டமிட்டு செயல்படவேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகள் உண்டாகும். உத்திராடம் 1: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். திருவோணம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பில். தடையும் தாமதமும் ஏற்படும். பயம் கூடும். அவிட்டம் 1,2: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சதயம்: எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் உண்டாகும். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். யோகமான நாள்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். புதிய நண்பர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.ரேவதி: உங்கள் முயற்சிக்கேற்ற வருமானம் வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.