இந்தோனேசியா புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்தோனேசியா புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18.05) நாட்டிலிருந்து புறப்பட்டார்.  

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தில் இணையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

"கூட்டு செழுமைக்கான நீர்" என்ற தலைப்பில் 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வு இந்தோனேசியாவின் பாலியில் இன்று முதல் மே 20 வரை நடைபெற உள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி மாநாட்டில் தனது விசேட உரையை ஆற்ற உள்ளார்.  

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​இந்தோனேசிய ஜனாதிபதி உட்பட நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4