அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
#Police
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
25,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி சிறைச்சாலை அதிகாரிகள் உரிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை தொடர்கிறது.
இதன் காரணமாக முழு பல்கலைக்கழக அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க பேரவையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே