நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே!
#SriLanka
#Parliament
#Count
Soruban
2 years ago
கடவுச்சீட்டு வழக்கில் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மோசடியான முறையில் இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குறித்த விடயம் குறித்தான அறிக்கையை இன்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தில் அஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே